ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. பெரும் வரவேற்பை பெற்ற ‘ரீசார்ஜ்’ ப்ளான் திடீரென நிறுத்தம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை திடீரென நிறுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களை திகைக்க வைக்கும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரூ.1 செலுத்தினால் 100 எம்பி டேட்டாவை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஜியோவின் இந்த அறிவிப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. பல நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய வேளையில் ஜியோவின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது.
அதேவேளையில் ரூ.2545 பிரீபெய்ட் திட்டத்தின் காலஅளவு மாற்றப்பட்டுள்ளது. புத்தாண்டு சலுகையாக இதனை ஜியோ அறிவித்துள்ளது. முன்னதாக இந்த திட்டத்தில் 336 நாட்கள் சொல்லுபடியாகும். தற்போது 29 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2545 ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் கால் அளவு கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

மற்ற செய்திகள்
