‘இனி இலவசமாக ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம்’!.. அதிரடியான பல ‘புதிய’ ஆஃபர்களை அறிவித்த ஜியோ..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் பல புதிய ஆஃபர்களை ஜியோ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2021-ம் ஆண்டுக்கான ஜியோவின் ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியை மக்கள் கண்டுகளிக்கும் விதமாக ஜியோ ப்ரீப்பெய்ட் யூசர்களுக்காக ரூ.401 திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. 30 நாள்கள் வேலிட்டிட்டியில் கொடுக்கப்படும் இந்த திட்டத்தில், மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் இலவசம். மேலும், ஓராண்டுக்கு ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவும், ஜியோ தொலைக்காட்சி மற்றும் சினிமா ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம்.
இதனை அடுத்து ரூ.2,599 ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் 10 ஜிபி இலவசமாக வழங்கப்படுகிறது. நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெடாக கொடுக்கப்படுகிறது. மொத்தம் 365 நாட்கள் (12 மாதங்கள்) வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.598 ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்கப்படுவதில்லை. ஆனால், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை ஓராண்டுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.777 ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்கள் வேலிடிட்டி அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. மேலும் ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுவதால் பயனர்கள் இந்த திட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.