மீடியால வெளியான ‘அந்த நியூஸ்’ உண்மை இல்லங்க... ‘நீடா அம்பானி குறித்து வெளியான பரபரப்பு தகவல்...’ – விளக்கம் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநீடா அம்பானி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நியமிக்கபட்டுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இணையத்தில் கடந்த இரு தினங்களாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டதாக செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கிறது.
நிடா அம்பானி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியாவார். அவர், ரிலையன்ஸ் இன்டஸ்டிரியின் நிர்வாக இயக்குநராகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் நீடா அம்பானி இருந்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி குறித்து நீடா அம்பானியின் சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக நீடா அம்பானி நியமிக்கப்படுகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது. இதுவரை எந்த பல்கலை கழகத்திலிருந்தும், சிறப்பு பேராசிரியராக பணிபுரிய எந்த அழைப்பும் வரப்பெறவில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.