எப்படிபோனேனோ.. அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் வந்த ஜியோவின் சூப்பர் பிளான்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோ நிறுவனம் சமீபத்தில் நீக்கிய பிரீபெய்ட் ப்ளான் சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தங்களது ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது. இதனை அடுத்து வோடபோன்-ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. அதனால் வாடிக்கையாளர்கள் பலரும் ஜியோவின் பக்கம் திரும்பினர்.
ஆனால் திடீரென ஜியோ நிறுவனமும் தங்களது ரீசார்ஜ் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தியது. மேலும் பல்வேறு ரீசார்ஜ் சலுகைகளையும் நிறுத்தியது. இது ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீயோ நிறுவனம் சமீபத்தில் நிறுத்திய ரூ.499 ப்ரீபெய்ட் பிளான் சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் கிட்டத்தட்ட முந்தைய பலன்களுடனேயே மீண்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்த ரூ.499 ப்ரீபெய்டு பிளான் சலுகையில் 56 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் சேவைக்கான ஒரு வருட சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
