வானில் தோன்றிய மர்ம வெளிச்சம்.. கிருஷ்ணகிரி இளைஞர் கேட்ட கேள்வி.. கூலாக பதில் கொடுத்த இஸ்ரோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு தென்பட்ட ஒரு ஒளியை பற்றி அறிய இஸ்ரோவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை வானில் தென்பட்ட வெளிச்சத்தை தனது செல்போன் கேமராவில் படம்படித்துள்ளார். என்னடா இது திடிரென்று வெளிச்சம் வருகிறதே இது என்ன அமெரிக்க திரைப்படங்களில் காட்டும் வேற்று கிரக வாசிகளால் வந்த வெளிச்சமா? இல்லை ராக்கெட் ஏதேனும் செலுத்தப்பட்டதா என குழப்பத்தில் இருந்துள்ளார்.
வானில் தோன்றிய மர்ம வெளிச்சம்:
சரி ஏன் நம்ப மண்டைய மட்டும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டும் என எண்ணிய அந்த இளைஞர் வானில் தோன்றிய மர்ம வெளிச்சம் குறித்தான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனைத்து ஊடகங்களுக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும், வாட்சப் குழுக்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இஸ்ரோவுக்கு மெயில்:
அதோடு நிற்காத அவர் தன்னுடைய சந்தேகத்தை போக்க வேண்டும் என நேராக இஸ்ரோவை கூட கேட்கலாம் என தோன்றியுள்ளது. வானில் தென்பட்ட வெளிச்சம் பற்றி தெரிந்துக்கொள்ள இஸ்ரோவுக்கு மெயில் அனுப்பினார்.
கிழக்கு பகுதியில் வானில் ஒளிரும் காட்சி:
அந்த மெயிலில், 'இன்று காலை வானில் இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒன்று விண்கலம் அல்லது விமானம் லேசர் ஒளிக்கற்றையுடன் சென்றது. மற்றொன்று கிழக்கு பகுதியில் வானில் ஒளிரும் காட்சி. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை. இது என்ன?' எனக் கேட்டு தன்னுடைய லோகேஷ்னையும் அனுப்பியுள்ளார்.
என்னதான் கடுமையான வேலைகள் இருந்தாலும் இஸ்ரோ ரொம்ப கூலாக பதில் மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மெயிலில், 'உங்க கேமரா நல்லா படம் பிடிச்சிருக்கு. அது வேறு ஒன்றும் இல்லை. இன்று காலை PSLV-C52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. உங்களுக்கு மேற்கொண்டு தகவல் வேண்டும் என்றால் இஸ்ரோ இணையதளத்தை அணுகலாம்.' என பதில் வந்துள்ளது. இந்த இளைஞர் செய்த சம்பவம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.