'மாலை அணிவித்து... சால்வை போர்த்தி... துப்புரவு பணியாளர்களுக்கு கிடைத்த மரியாதை... மத்திய அரசு அதிகாரி செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி, துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பதையும், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தேசியத் துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, துப்புரவுப் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் குடியிருப்பு வசதிகள் குறித்தும், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, சிறந்த முறையில் பணியாற்றிய 5 துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து, அவர்களை கௌரவப் படுத்தினார். அத்தோடு, அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கினார். மத்திய அரசு அதிகாரியின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
