கமல்ஹாசனின் இந்த கிளாசிக் காமெடி படத்தின் தீவிர ரசிகையாம் தல அஜித்தின் நாயகி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 18, 2019 11:20 AM
தல அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் திரைப்படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகை வித்யா பாலன். இவர் தனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் தமிழ் திரைப்படம் என கமல்ஹாசனின் படம் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “எனக்கு மிகவும் பிடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தை மீண்டும் கணவர் சித்தார்த்துடன் பார்த்து ரசித்தேன். ஒரே ஒரு கமல்ஹாசன் தான்..! என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ஊர்வசி. த்ருப்பு த்ருப்பு..”
பிரபல இயக்குநர் சிங்கிதம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பு, ரூபினி, மணோரமா, நாகேஷ், எஸ்.என்.,லக்ஷ்மி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த ‘மைக்கேல் மதனகாமராஜன்’ திரைப்படத்தில் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அதில், கமல்ஹாசன் பாலக்காடு தமிழ் பேசும் மலையாளி கதாபாத்திரத்தில் நடித்த காமேஸ்வரன் கேரக்டர் பலரையும் கவர்ந்தது.