கவின் குறித்து முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 05:53 PM
கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடமும், லாஸ்லியா மூன்றாமிடமும் பெற்றனர்.

மேலும் இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் கவின். 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்றாக பரீட்சையமானவர். இந்ந நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் காதல், சாண்டியுடன் நட்பு என ரசிகர்களின் கவனம் இவரை சுற்றியே இருந்தது.
இந்நிலையில் பரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான ரேஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு பக்கங்களில் இருந்து ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. தங்கமான இதயம் கொண்டவர். என்னுடைய சகோதரர், வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Kavin, Losliya, Bigg Boss 3, Reshma Pasupuleti