கமல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 11:37 AM
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு வழயாக நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தில் சாண்டி இருந்தார்.

இந்த சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக அவர் விளங்கியவர் தர்ஷன். இவர் கடந்த வாரம் வெளியேறி ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அப்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தர்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 3யின் உண்மையான வின்னர் தர்ஷன் தான் என தங்கள் ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்தனர்.
கமலும் தனக்கு தர்ஷன் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார். இந்நிலையில் ஃபைனலில் மேடையில் தோன்றிய பேசிய கமல், தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் தர்ஷன் நடிக்கவிருப்பதாக அறிவித்தார்.
Tags : Kamal Haasan, Tharshan, Bigg Boss 3