களைக்கட்டும் பிக் பாஸ் கொண்டாட்டம்! தளபதி பாட்டுக்கு கவின் டான்ஸ் - வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Bigg Boss 3 Kavin dances for Thalapathy Vijay's Song

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், பிக் பாஸ் வீட்டில் ஒரு உறவு முறையுடனே குடும்பமாக வாழ்ந்தனர். இந்நிலையில், இந்த குடும்பம் தங்களது கொண்டாட்டத்தை விரைவில் அரங்கேற்றவுள்ளதாக தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் சாண்டி, கவின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா, அபிராமி, முகென், சாக்ஷி உள்ளிட்டோர் டான்ஸ் ரிஹர்சலில் இருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், விரைவில் விஜய் டிவ்யில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சீசனின் காதல் மன்னனாக கருதப்படும் கவின், பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடனமாடும் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், கவின் தளபதி விஜய் கெட்டப்பில் இருக்கிறார். ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்ற ‘டாப்பு டக்கரு’ பாடலுக்கு கவின் நடனமாடவிருப்பதாக வரது ஆர்மியினர் கூறி வருகின்றனர். தளபதி கெட்டப்பில் இருக்கும் கவினுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்து வருகின்றது.

களைக்கட்டும் பிக் பாஸ் கொண்டாட்டம்! தளபதி பாட்டுக்கு கவின் டான்ஸ் - வைரலாகும் புகைப்படம் வீடியோ