''Love You Losliya'' - பிக்பாஸ் 3 போட்டியாளர் நெகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 10, 2019 12:41 PM
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே முகேன் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த சீசனில் அபிராமியும் லாஸ்லியாவும் நெருக்கமான தோழிகளாக காணப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் பிரச்சனைகளின்போது இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். தற்போது வெளியே வந்த பிறகும் இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியா அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்பி லவ் என்ற டாட்டூ பொறிக்கப்பட்ட இரண்டு கைகள் மட்டும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய இதயத்தை காயப்படுத்தாத ஒருவர், எப்பொழுதும் என்னுடன் இருக்கும் ஒருவர், லவ் யூ மை பேபி லாஸஸ்லியா'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Abhirami Venkatachalam, Losliya, Bigg Boss 3