இந்த பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரானார் முகேன் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 11:04 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. குறிப்பாக இந்நிகழ்ச்சியில் காதல், பாசம், சண்டைகள் என நாளுக்கு நாள் பரபரப்பாகவே இருந்தது.

மேலும் இந்த சீசனில் மதுமிதா, சரவணன் விதிகளை மீறியதால் அதிரடியாக வெளியேறியது,கவின் - லாஸ்லியா, முகேன் - அபிராமி, தர்ஷன் - ஷெரின் உள்ளிட்டோரிடையேயான காதல் விவகாரங்கள், சேரனின் மகள் பாசம் என பெரிதும் சமூகவலைதளங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.
ஒருவழியாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்துள்ளது. இறுதிப்போட்டியாளர்களான முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியாவில் முகேன் பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடமும், லாஸ்லியா மூன்றாமிடமும் பிடித்தனர்.
Tags : Mugen, Sherin, Bigg Boss 3, Losliya, Kavin