'உன்னை வின்னராக பார்க்க....' - Bigg Boss 3 Tittle Winner முகேன் குறித்து ஷெரின் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 08, 2019 09:29 AM
பார்வையாளர்களை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடி முகேன் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை எப்பொழுதும் கலகலப்பாக வைத்துக்கொண்டிருந்த சாண்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. மூன்று மற்றும் நான்காம் இடங்களில் முறையே லாஸ்லியாவும், ஷெரினும் இடம் பெற்றனர்.
இந்நிலையில் டைட்டில் வின்னரான முகேன் பற்றி ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், டைட்டில் வின்னர் ஆவதற்கு தகுதியானவன் நீ. உன்னை வின்னராக பார்ப்பதற்கு மகுந்த இன்பமாக இருக்கிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags : Mugen, Sherin, Losliya, Sandy, Bigg Boss 3