அசுரனில் தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டிய உலகநாயகன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 12, 2019 10:17 AM
4வது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், டிஜே, கென், ஆடுகள் நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உலக நாயகன் கமல்ஹாசன் அசுரன் படத்தை பார்த்துள்ளார். உடனடியாக இந்த படத்தின் ஹீரோயின் மஞ்சு வாரியரை அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், இயக்குநர் வெற்றிமாறனை ஃபோன் மூலம் அழைத்து பாராட்டிய கமல், நடிகர் தனுஷை அழைத்து நடிப்பு குறித்து வெகுவாக சிலாகித்துள்ளார்.