பிக்பாஸ்க்கு பிறகு முதன் முறையாக இவரது வீட்டுக்கு சென்ற லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 10, 2019 10:07 AM
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சாண்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகின்றனர்.
மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட லாஸ்லியா பற்றிய எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் லாஸ்லியா வனிதாவின் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். கூடவே சேரனும் அவருடன் கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் வனிதா ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. தற்போது இருவரும் சுமூகமாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ்க்கு பிறகு முதன் முறையாக இவரது வீட்டுக்கு சென்ற லாஸ்லியா வீடியோ
Tags : Vanitha, Losliya, Bigg Boss 3, Cheran