தலயின் 'நேர்கொண்ட பார்வை', தளபதியின் சிங்கப்பெண்களே.. - இந்திய கிரிக்கெட் வீரர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மைதானத்தில் தனது ஆக்ரோஷமான செயல்பாடுகளால் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையம். இந்த வருடம் ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி, சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

Harbhajan Singh tweets about Ajith's Nerkonda Paarvai, Vijay's Bigil

இதனையடுத்து அவர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வருகிறார். அப்படி அவரது தமிழ் பதிவுகள் அடிக்கடி வைரலாவது வழக்கம். தற்போது தமிழில் மீண்டும் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில், துர்கை அம்மன் துணை!! பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது தலயின் நேர்கொண்டபார்வை. அநீதிகள் அடங்க அதர்மங்கள் ஒழிய வீரம் கொண்டு பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் எழுந்து வாருங்கள் தளபதியின் சிங்கபெண்களே, இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.