www.garudabazaar.com

LOVE TODAY : ரூ.100 கோடி வசூல்.. "நான் ஹீரோவா நடிச்சா கலாய்ப்பாங்க.." - பிரதீப்பின் அடுத்த மாஸ் Speech..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

Love Today 100 crores Pradeep Ranganathan Mass Speech

Also Read | “எனக்கு அந்த ஸ்லாங் வேணும்..!”.. படையப்பாவில் 5 முறை ரெக்கமெண்ட் செய்த ரஜினி .. அனுமோகன் நெகிழ்ச்சி..!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் உருவாகி வெளியான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில், “இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல் உறவு சிக்கல்களைப் பற்றி நகைச்சுவை கலந்து டிராமாவாக இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ கவர்ந்த இப்படத்தை பலரும் பாராட்டியிருந்தனர். இதனிடையே லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டு வரும் இந்நிலையில் இப்பட விழாவில் தற்போது பேசியுள்ள இப்படத்தின் இயக்குநரும் நாயகனுமான பிரதீப் ரங்கநாதன், “லவ் டூடே 100 கோடி ருபாய் உலகளவில் வசூலித்துள்ளது. படத்தில் நான் கதாநாயகனாக நடித்து மொக்கை வாங்கினால் திரும்பி எழுவது கஷ்டம், கலாய்ப்பாங்க என நிறைய பேர் சொன்னார்கள். சிலர் இந்த படம் ஒரு மலைபோன்றது என்றார்கள்.

ஆனால் நான் யோசித்தது என்னவென்றால், மலையேறுவது கஷ்டமா? மலையேற என்ன வேண்டும்? உபகரணங்கள், பயிற்சி, உடல்பலம், ஆக்ஸிஜன் இதெல்லாமா? இல்லை. மலை ஏற முதலில் மலை வேண்டும். அந்த மலையை முதலில் செட் பண்ண வேண்டும். அதுதான் லவ் டுடே. பரங்கிமலை ஏறிவிடலாம், ஆனால் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது கஷ்டம். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருக்கீங்க என நினைத்தான் ஒரு பெரிய விஷயத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்” என பேசினார்.

மேலும் தன்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்தார்.

Also Read | “நம்ம வெச்சு கொன்னியே.. எல்லாமே பொய் தானா”.. காதலர் தினத்தில் ஹிப் ஹாப் தமிழாவின் வைரல் பாடல்..

LOVE TODAY : ரூ.100 கோடி வசூல்.. "நான் ஹீரோவா நடிச்சா கலாய்ப்பாங்க.." - பிரதீப்பின் அடுத்த மாஸ் SPEECH..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Love Today 100 crores Pradeep Ranganathan Mass Speech

People looking for online information on Love today, Pradeep Ranganathan will find this news story useful.