www.garudabazaar.com

கமல் நடிக்கும் இந்தியன்- 2.. சென்னையில் ஷூட்டிங்? எங்கே? எப்போ? BREAKING அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Kamal Hassan Indian 2 Shooting starts tomorrow in Aditya Ram Studio

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..!

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Kamal Hassan Indian 2 Shooting starts tomorrow in Aditya Ram Studio

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர். பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில்  நடைபெற்றது.  

Kamal Hassan Indian 2 Shooting starts tomorrow in Aditya Ram Studio

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை முதல் சென்னை பனையூரில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெறும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்த படப்பிடிப்புக்கு மட்டும் தொடர்ச்சியாக 30 நாட்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், இந்த படப்பிடிப்பு 11 வது கட்டமாக நடைபெறுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | நடிகை இவானாவோடு டான்ஸ் ஆடிய G.P. முத்து.. LOVE TODAY படத்தின் 100-வது நாள் விழாவில் ருசிகரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Hassan Indian 2 Shooting starts tomorrow in Aditya Ram Studio

People looking for online information on Aditya Ram Studio, Indian 2, Indian 2 Shooting update, Kamal Haasan will find this news story useful.