www.garudabazaar.com

இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் 'Surya 42'.. ஷூட்டிங் குறித்த EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பிரத்யேக தகவல்களை நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.

Bofta Dhananjayan about Surya 42 Movie Shooting Update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | SURYA 42.. "சூர்யா சார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ்".. பிரபல தயாரிப்பாளர் EXCLUSIVE!

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக 3 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு (21.08.2022) அன்று  அகரம் பவுண்டேஷனில்  நடந்தது.

Bofta Dhananjayan about Surya 42 Movie Shooting Update

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார். திஷா பட்டாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Bofta Dhananjayan about Surya 42 Movie Shooting Update

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது.   இந்த படத்தின் கோவா படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது.  இந்த படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் சூர்யா 42 படம் குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்துள்ளார். அதில், "சூர்யா 42 திரைப்படத்திற்கு இயக்குனர் சிவாவை பாராட்ட வேண்டும். படப்பிடிப்பு இடைவிடாது சென்று கொண்டிருக்கிறது.  இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் இந்த படத்தின் கதை நடக்கிறது. நடப்பு கால கதைக்களத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு பிரம்மாண்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கும்" என தனஞ்செயன் கூறியுள்ளார்.

Also Read | தமிழ்ல செமயா பாடுறாங்களே 😍.. LATEST சூப்பர் ஹிட் SONG-அ பாடி அசத்திய அனுபமா பரமேஸ்வரன்!

இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் 'SURYA 42'.. ஷூட்டிங் குறித்த EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bofta Dhananjayan about Surya 42 Movie Shooting Update

People looking for online information on Bofta Dhananjayan, Siruthai Siva, Suriya, Surya 42 Movie Shooting Update will find this news story useful.