www.garudabazaar.com

SURYA 42.. "சூர்யா சார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ்".. பிரபல தயாரிப்பாளர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை பிரபல தயாரிப்பாளர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.

Suriya 42 Movie Career Best Business for Suriya Says Dhananjayan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | நடிகை இவானாவோடு டான்ஸ் ஆடிய G.P. முத்து.. LOVE TODAY படத்தின் 100-வது நாள் விழாவில் ருசிகரம்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பூஜை கடந்த ஆண்டு (21.08.2022) அன்று  அகரம் பவுண்டேஷனில்  நடந்தது. இந்த படத்திற்கு 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Suriya 42 Movie Career Best Business for Suriya Says Dhananjayan

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

Suriya 42 Movie Career Best Business for Suriya Says Dhananjayan

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது.   இந்த படத்தின் கோவா படப்பிடிப்பு 35 நாட்கள் நடந்தது.  இந்த படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்துள்ளார். "சூர்யா 42 திரைப்படம், சூர்யா சாரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ் செய்யப்பட்ட படமாக அமைந்துள்ளது என ஞானவேல்ராஜா கூறினார். சூர்யா - சிவா - ஞானவேல்ராஜா மூவரும் இணைந்த காம்பினேஷன் என்பது பலமானது. சூர்யா 42 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த படத்திற்கு பெரிய அளவில் வியாபாரம் உள்ளது. நான் சொல்ல வருவது டிஜிட்டல் ஒடிடி உரிமம், சேட்டிலைட் டிவி உரிமம், இந்தி டப்பிங் உரிமம் எல்லாம் சேர்த்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது." என தனஞ்செயன் கூறியுள்ளார்.

Also Read | கமல் நடிக்கும் இந்தியன்- 2.. சென்னையில் ஷூட்டிங்? எங்கே? எப்போ? BREAKING அப்டேட்!

SURYA 42.. "சூர்யா சார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ்".. பிரபல தயாரிப்பாளர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Career Best Business for Suriya Says Dhananjayan

People looking for online information on Bofta Dhananjayan, Dhananjayan, Suriya, Suriya 42 will find this news story useful.