www.garudabazaar.com

சொல்லுங்க மாமாக்குட்டி.. இந்தா வந்துருச்சுல்ல.. Love Today -வின் ரகளையான ‘Long Drive போலாமா’ Video.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

love today Mamaaakutttty Long drive Video Out trending

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை எட்டியதை ஒட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன் பிரதீப் ரங்கநாதன்" என கூறியிருந்தார்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதாக நம்பும் இளம் தம்பதியிடம்பேசும் பெண்ணின் அப்பா, காதலர்களான அவர்கள் இருவரையும் ஒரு நாள் மட்டும் பரஸ்பரம் தங்கள் செல்போனை மாற்றி வைத்திருக்க கண்டிஷன் போடுகிறார்.

அதன் பின் நடக்கும் இந்த படத்தின் சுவாரஸ்ய கதையும், திரைக்கதையும், கதாபாத்திர தேர்வும், ட்ரீட்மெண்டும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இதேபோல் பாய் பெஸ்டி, க்ரிஞ்ச், உருட்டு என தற்கால காதலர்களிடையிலான ட்ரெண்டிங் விஷயங்களும் இளைஞர்களை கவர்ந்தன. அதன் ஒரு அம்சமாக இப்படத்தின் நாயகி, முன்னாள் காதலரை மாமாக்குட்டி என அழைப்பதும், அதை அறிந்த நாயகன் டென்ஷனாவதும், இதை தொடர்ந்து வரும் ‘’ பிரபலமானது.

இந்நிலையில் இந்த பாடலின் முழு வீடியோவு தற்போது சோனி லைவில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

love today Mamaaakutttty Long drive Video Out trending

People looking for online information on AGS Entertainment, Ivana, Kalpathi S. Aghoram - AGS Entertainment, Love today, Mamaaakutttty, Mamakutty, Pradeep Ranganathan, Red Giant Movies will find this news story useful.