www.garudabazaar.com

தெலுங்கிலும் அசத்தும் லவ் டுடே.. பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். 

Pradeep Ranganathan Love Today Telugu Audiance Response

Also Read | மாநாடு ரிலீசாகி ஒரு வருடம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Pradeep Ranganathan Love Today Telugu Audiance Response

இந்த படத்தின் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை கடந்த வாரம் எட்டியதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Pradeep Ranganathan Love Today Telugu Audiance Response

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன்

பிரதீப் ரங்கநாதன்" என கூறியிருந்தார்.

Pradeep Ranganathan Love Today Telugu Audiance Response

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தெலுங்கில் இந்த படத்தினை ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கண்டுகளித்தார்‌. அப்போது படம் முடிந்து பிரதீப் ரங்கநாதன் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ஒரு ரசிகர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Also Read | அசீம்க்கு ரொம்ப தைரியம்.. நீதிபதி மேலேயே புகார் சொல்றாரு! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep Ranganathan Love Today Telugu Audiance Response

People looking for online information on Love today, Love Today Telugu Audiance Response, Pradeep Ranganathan will find this news story useful.