www.garudabazaar.com

நடிகை இவானாவோடு டான்ஸ் ஆடிய G.P. முத்து.. LOVE TODAY படத்தின் 100-வது நாள் விழாவில் ருசிகரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லவ் டுடே படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் நடிகர் ஜி.பி. முத்து & நடிகை இவானா நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

GP Muthu Dance with Love Today actress Ivana

Also Read | காதலரை முதல் முறையாக அறிமுகம் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. இவர் தானா? செம்ம ஃபேமஸ் ஆச்சே!

'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில்  நடித்திருந்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.

GP Muthu Dance with Love Today actress Ivana

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

மேலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்தது.

GP Muthu Dance with Love Today actress Ivana

கடந்த நவம்பரில் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

GP Muthu Dance with Love Today actress Ivana

இந்த நிகழ்வில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், நடிகை இவானா ஆகியோருடன் இணைந்து நடிகர் ஜி.பி. முத்து நடனமாடி அசத்திய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இந்த நடனத்திற்கு KPY பாலா சொன்ன கமெண்ட்டும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Also Read | இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..!

நடிகை இவானாவோடு டான்ஸ் ஆடிய G.P. முத்து.. LOVE TODAY படத்தின் 100-வது நாள் விழாவில் ருசிகரம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu Dance with Love Today actress Ivana

People looking for online information on GP MUTHU, GP Muthu Dance with Ivana, Ivana, Love today, Love Today actress Ivana will find this news story useful.