www.garudabazaar.com

தமிழ்ல செமயா பாடுறாங்களே 😍.. LATEST சூப்பர் ஹிட் SONG-அ பாடி அசத்திய அனுபமா பரமேஸ்வரன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Anupama Parameshwaran Singing A R Rahman VTK Mallipoo Song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கமல் நடிக்கும் இந்தியன்- 2.. சென்னையில் ஷூட்டிங்? எங்கே? எப்போ? BREAKING அப்டேட்!

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'பிரேமம்', 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து தெலுங்கிலும் பிரபலமானார்.

Anupama Parameshwaran Singing A R Rahman VTK Mallipoo Song

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம்  வெளியானது. தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். கார்த்திக்கேயா - 2 படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையாக அனுபமா பரமேஸ்வரன் பிரபலமாகி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் பட்டர்பிளை, 18  Pages ஆகிய படங்கள் தெலுங்கில் வெளிவந்தன.

Anupama Parameshwaran Singing A R Rahman VTK Mallipoo Song

Images are subject to © copyright to their respective owners.

அனுபமா பரமேஸ்வரன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம்.  சமீபத்தில் போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Anupama Parameshwaran Singing A R Rahman VTK Mallipoo Song

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாடியுள்ள வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "மலையாளத்தில் தமிழ் பேசுவது என்னுடைய புதிய திறமை" என கூறி மல்லிப்பூ பாடலை பாடியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Also Read | SURYA 42.. "சூர்யா சார் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பிசினஸ்".. பிரபல தயாரிப்பாளர் EXCLUSIVE!

தமிழ்ல செமயா பாடுறாங்களே 😍.. LATEST சூப்பர் ஹிட் SONG-அ பாடி அசத்திய அனுபமா பரமேஸ்வரன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameshwaran Singing A R Rahman VTK Mallipoo Song

People looking for online information on Anupama Parameshwaran, AR Rahman, VTK Mallipoo Song will find this news story useful.