www.garudabazaar.com

Love Today படத்துக்கு முதல்ல வச்ச டைட்டில் இது தான்.. நடிகர் சத்யராஜ் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சத்யராஜ் லவ் டுடே படத்திற்கு வைத்த முதல் தலைப்பு குறித்து பேசியுள்ளார்.

Sathya Raj about Love Today Movie Previous Title

Also Read | இந்த வாரம் கிறிஸ்துமஸ்-க்கு OTT- யில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்! முழு விவரம்

'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.

Sathya Raj about Love Today Movie Previous Title

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

Sathya Raj about Love Today Movie Previous Title

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இதனையடுத்து இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Sathya Raj about Love Today Movie Previous Title

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகர் சத்யராஜ் அளித்துள்ளார். அதில், பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு,  "பிரதீப் ரங்கநாதன் மீது இயக்குனராக நம்பிக்கை இருந்தது. கோமாளி படம் பார்த்தேன் பிடித்திருந்தது. லவ் டுடே படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னார். ஏற்கனவே அவர் எடுத்த குறும் படத்தை காட்டினார். அப்பா லாக் என்று டைட்டிலை சொன்னதும் குஷி ஆகிட்டேன். பின்னர் தலைப்பு லவ் டுடே என்றானது. பிரதீப் கதை சொல்லும் போது நம்பிக்கையாக இருந்தது. முதல் நாள் நடிக்கும் போது பிரமாதமாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று தெரிந்தது" என சத்யராஜ் பதில் அளித்தார்.

Also Read | THUNIVU: கேங்ஸ்டர் லுக்கில் நடிகர் அஜித்.. மிரட்டலான போஸ்டருடன் வெளியான 3rd SINGLE அப்டேட்!

LOVE TODAY படத்துக்கு முதல்ல வச்ச டைட்டில் இது தான்.. நடிகர் சத்யராஜ் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sathya Raj about Love Today Movie Previous Title

People looking for online information on Love today, Sathya Raj about Love Today Movie, Sathyaraj will find this news story useful.