தயாரிப்பாளரும், திமுக எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் கொரோனாவினால் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Jayam Ravi's Aadhi Bhagavan's Producer and DMK MLA J.Anbazhagan dies of Coronavirus | கொரோனா வைரஸினால் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மரணம்

அதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (10/06/2020) காலை 8.05 மணிக்கு மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இவர் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான 'ஆதி-பகவன்' படத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு அரசியல் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Jayam Ravi's Aadhi Bhagavan's Producer and DMK MLA J.Anbazhagan dies of Coronavirus | கொரோனா வைரஸினால் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மரணம்

People looking for online information on DMK, J Anbazhagan, Jayam Ravi, MLA will find this news story useful.