விஜய்யின் மாஸ்டர் பாடல் கேட்டு அதிரும் அனிருத் ஸ்டூடியோ.! - '6 மணிக்கு என்ன எனர்ஜி.!!!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் அனிருத், விஜய்யின் மாஸ்டர் பட பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். 

விஜய்யின் மாஸ்டர் பாடலை கேட்டு அதிரும் அனிருத் ஸ்டூடியோ | anirudh making video of vijay master vaathi raid beat

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சம்மருக்கு ரிலீஸ் ஆக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய பிறகு தனது இசைக்குழுவுடன் அதை கேட்டு ரசிக்கும் வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார். மேலும், ''நேரம் - 6.45. ஒரு அதிகாலை நேரத்தில் முதல்முறையாக வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை கேட்ட போது, இதுதான் எங்கள் ரியாக்‌ஷன்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் பாடலை கேட்டு அதிரும் அனிருத் ஸ்டூடியோ | anirudh making video of vijay master vaathi raid beat

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vaathi Raid, Vijay will find this news story useful.