BREAKING : பிரபல ஹீரோவின் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படம்... டீலை முடித்த அந்த நிறுவனம்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தின் திரையரங்க உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து நீடித்து வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த எம்.குமரன், சம்திங் சம்திங், தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், லக்ஷமன் இயக்கத்தில் பூமி மற்றும் அஹமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்துள்ள பூமி படத்தை குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் விஜய்யின் பிகில், இருட்டு, தாராள பிரபு உள்ளிட்ட படங்களின் திரையரங்க உரிமையை முன்னர் பெற்றது குறிப்பிடத்தக்கது.