''என் பொண்ணு இப்படி சொன்னாள்.. '' - மோகன்ராஜா எமோஷனலான தருணம் - ஜெயம் ரவியின் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம், ''அப்பா இப்போது கே டிவியில் தனி ஒருவனையும் சேர்த்து 8 படங்கள் ('ஜெயம்', 'எம்.குமரன்', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பரமணியம்', 'தில்லாலங்கடி', 'வேலாயுதம்', 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்') மற்றும் சித்தப்பா நடித்த 'நிமிர்ந்து நில்', 'பூலோகம்', 'அடங்கமறு', 'வனமகன்', 'கோமாளி' என்கிற படங்கள் கடந்த லாக்டவுன் 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பி விட்டார்கள்'' என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.

இந்த லாக்டவுன் என்கிற கடின நாட்களில், எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கி விட வேண்டும் என்று நான் ஆகாயத்தில் கோட்டைகட்டிய பக்குவமற்ற வயதில், குரு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து ''ஆடியன்ஸ் தான் நம்ம கடவுள். அவங்கள திருப்தி பண்ற படங்கள எடு'' என்கிற மந்திரத்தை தலையில் அன்றே ஏற்றியதை நினைவுக்கு வருகிறது.

இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தை பூரிப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான். படங்களில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் மற்றும் ஒளிபரப்பும் அத்தனை ஊடகங்களுக்கும் நன்றி ''என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, ''இந்த சிறப்பான பயணத்தில் உங்களுடன் பயணித்தது ஆசிர்வதிக்கபட்டவனாக உணர்கிறேன் அண்ணா'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor