தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக, பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு, இயக்கம், கவிஞர், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பல அவதாரங்களை எடுத்தவர். இளம் வயதில் நடிக்க வந்த அவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். 

actor dhanush second directorial film title rudhran revealed

தனுஷ் 2017-ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்தப் படம் பரவலான கவனம் பெற்று ஹிட் அடித்தது. தற்போது தனுஷ் இயக்கவிருக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. 

‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட, இரண்டு ஷெட்யூல்களுடன் முடிந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

லாக்டவுன் முடிந்ததும் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கவிருக்கிறது.  இந்தப்படத்தில் நாகார்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படக்குழுவினர் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor dhanush second directorial film title rudhran revealed

People looking for online information on Corona Virus, Covid 18, Dhanush, Lockdown, Nagarjuna, Rudhran will find this news story useful.