RIP - கொரோனாவுக்கு அடுத்த பலி...பிரபல நடிகர் துபாயில் மரணம் அடைந்தார்... துக்கத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

பிரபல நடிகர் கொரோனாவால் மரணம் அடைந்தார் Popular actor dies due to corona disease in dubai

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான S.A.ஹாசன் தற்போது மரணமடைந்துள்ளார். அவர்  துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 'ஹலோ துபாய்காரன்' என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை கண்டறிந்தனர். பின்பு அவரது நிலைமை மிகவும் மோசமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகர் ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் கொரோனாவால் மரணம் அடைந்தார் Popular actor dies due to corona disease in dubai

People looking for online information on Corona, Death, S.A.Hassan will find this news story useful.