Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா.. "நாயகியாக களமிறங்கும் பாலிவுட் நடிகை?!.. வெளியான தகவல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா இணையவுள்ள திரைப்படத்தின் நடிகை யார் என்பது பற்றி, தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Disha patani as female lead in siva and suriya movie sources

Also Read | பிரபல OTT-க்காக தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. போட்டோவுடன் வெளியான தெறி அப்டேட்!

கடந்த ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில், Rolex என்னும் கதாபாத்திரத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா. ஒரு சில நிமிடங்களே அந்த திரைப்படத்தில் சூர்யா தோன்றினாலும், அவரது வில்லத்தனமான நடிப்பு, பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம், பாலா இயக்கத்தில் 'வணங்கான்', அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.

Disha patani as female lead in siva and suriya movie sources

அந்த வகையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் ஆரம்பமாகும் என நடிகர் கார்த்தி, Behindwoods சேனலுக்கான பிரத்யேக நிகழ்ச்சியில் (Karthi Fans Festival) தெரிவித்திருந்தார். கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' திரைப்படத்தை இயக்கி இருந்த சிறுத்தை சிவா, தற்போது சூர்யாவுடன் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.

Disha patani as female lead in siva and suriya movie sources

புதிய கூட்டணி என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் நடிகை யார் என்பது பற்றி நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகையான திஷா பட்டானி சூர்யாவுக்கு ஜோடியாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Disha patani as female lead in siva and suriya movie sources

முன்னதாக, சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் பணிபுரிய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Ponniyin Selvan :இரண்டாவது சிங்கிளுக்கு முன் வெளியான அசத்தல் Glimpse வீடியோ!!.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Disha patani as female lead in siva and suriya movie sources

People looking for online information on Disha Patani, Siruthai Siva, Siruthai Siva next movie, Suriya will find this news story useful.