Kaateri logo top
www.garudabazaar.com

"தேசிய விருது வாங்குனது எனக்கே முதல்'ல தெரியல".. விருமன் விழாவில் சூர்யா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று (04.08.2022) நடைபெற்றது.

Suriya about his fans on the announcement of national award

Also Read | இயக்குனர் ஷங்கர் உடன் நடிகர் சிவகார்த்திகேயன்.. டிரெண்டாகும் வைரல் புகைப்படங்கள்!

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’வி0ருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya about his fans on the announcement of national award

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை  மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில்  நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தனது சகோதரரும், நடிகருமான கார்த்தி குறித்து பேசிய சூர்யா, "கார்த்திக்கு முன்பே நான் நடிக்க வந்து இருந்தாலும், என்னை விட அதிகமாக சினிமாவைப் பற்றி பேசுவதும், செயல்படுவதும் கார்த்தி தான் என்று வெளிப்படையாக எந்த மேடையிலும் கூறுவேன். சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். என்னைவிட சிறந்த நடிகர் கார்த்தி. யுவன் கார்த்தி இருவருமே என்னுடைய தம்பிகள். அவர்கள் இருவரும் சினிமாவிற்கு செய்த பதிவை யாராலும் மறக்க முடியாது. என்னை விட பல மடங்கு அவர்களை கொண்டாடுவார்கள். பல விருதுகளை பெறுவார்கள்.

Suriya about his fans on the announcement of national award

என் மகளுடைய படிப்பிற்காக 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன். அப்போது தேசிய விருது கிடைத்ததை நான் தெரித்துக் கொள்ள மூன்று மணி நேரம் ஆனது. அதற்குள்ளேயே நீங்கள் கொண்டாடினீர்கள். அதை உங்களுடைய விருதாக பார்த்தீர்கள். கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடக்கூடிய ஊர் மதுரை. இந்த ஊரில் உங்கள் முன்பு விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடுவதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எப்போதும் உங்களுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். டில்லியும் ரோலெக்ஸும் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Also Read | "அவங்க எங்க ஆபீஸ் வந்த முதல் நாளே" - ஷங்கர் மகள் குறித்து சூர்யா..

தொடர்புடைய இணைப்புகள்

Suriya about his fans on the announcement of national award

People looking for online information on Karthi, Suriya, Viruman, Viruman Audio Launch will find this news story useful.