Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

EXCLUSIVE: "இன்னொரு பெரிய படம் பன்றேன்.." SECRET அப்டேட் கொடுத்த S.J. சூர்யா! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Vijay Varisu Movie SJ Suriyah Latest Exclusive Update

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

Vijay Varisu Movie SJ Suriyah Latest Exclusive Update

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த 04.07.2022 அன்று முதல் துவங்கி ஜூலை 25 வரை  படப்பிடிப்பு  நடந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை நடிகர் எஸ் ஜே சூர்யா பகிர்ந்துள்ளார். அதில், இன்னொரு பெரிய படம் பன்றேன்.. அதை நான் சொல்ல முடியாது. அங்க எல்லாமே சீக்ரெட்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Varisu Movie SJ Suriyah Latest Exclusive Update

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றன.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது.

EXCLUSIVE: "இன்னொரு பெரிய படம் பன்றேன்.." SECRET அப்டேட் கொடுத்த S.J. சூர்யா! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie SJ Suriyah Latest Exclusive Update

People looking for online information on Sj suriyah, Varisu, Vijay will find this news story useful.