Viruman Logo Top
www.garudabazaar.com

மும்பையில் குடும்பத்துடன் சூர்யா & ஜோதிகா.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ் & வீடியோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா & ஜோதிகா குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுள்ளனர்.

Suriya Jyothika family at Mumbai Viral Photos

Also Read | விருமன் படத்திற்காக களமிறங்கிய அதிதி ஷங்கர்..பிரபல போட்டோகிராபருடன் போட்டோஷூட்!

நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் ஹீரோவாக கார்த்தி நடிக்கும் 'விருமன்'படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணையும் புதிய படத்துக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Suriya Jyothika family at Mumbai Viral Photos

தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்னா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.

Suriya Jyothika family at Mumbai Viral Photos

இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதியில் நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. வீடியோவில் சூர்யா & ஜோதிகா உணவு விடுதியில் இருந்து வெளியேறி வாகனத்தில் ஏறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் புகைப்பட கலைஞர்களுக்கு சூர்யா ஜோதிகா இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Also Read | பிரான்ஸ்க்குச் சுற்றுலா போன பிரியா பவானி சங்கர்.. பிரபல ஹீரோவின் 'காமெடி' கமெண்ட்..!

மும்பையில் குடும்பத்துடன் சூர்யா & ஜோதிகா.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ் & வீடியோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Jyothika family at Mumbai Viral Photos

People looking for online information on Jyothika, Mumbai, Suriya, Suriya Jyothika family will find this news story useful.