Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. வெளியான கலர்ஃபுல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின்  டிரெய்லர்  வெளியாகி உள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Official Trailer

Also Read | கோப்ரா படத்தின் டிரெய்லர் எப்போ வரும்? சியான் விக்ரம் கொடுத்த அதிரடி அப்டேட்!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில்  நடத்தது, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டு நிறைவுச்செய்தது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Official Trailer

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Official Trailer

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

காதலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. ஒரு பாலின காதல், இரு பாலின காதல், காதலில் உள்ள அரசியல் ஆகியவை படத்தின் டிரெய்லரில் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காட்சிக்கும் பிரத்யேகமான வண்ணங்கள் மற்றும் ஒளி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Official Trailer

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | திருச்சிற்றம்பலம் படம் பார்த்துட்டு டிவிட்டரில் செல்வராகவன் இட்ட பதிவு! வைரலாகும் ட்வீட்

பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. வெளியான கலர்ஃபுல் டிரெய்லர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie Official Trailer

People looking for online information on Natchathiram Nagargirathu, Natchathiram Nagargirathu Movie Trailer, Pa Ranjith will find this news story useful.