Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

பிரபல OTT-க்காக தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. போட்டோவுடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா நடிக்கும் புதிய பான் இந்திய படத்தின் படத்தின் அப்டேட்  வெளியாகி உள்ளது.

Tamannaah Bhatia Babli Bouncer Movie Dubbing Work Finished

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. வெளியான வண்ணமயமான அசரவைக்கும் டிரெய்லர்!

பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் சிறந்த படைப்பாளியாக பாலிவுட்டில் அறியப்படுபவர்.

தமன்னா நடிப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

Tamannaah Bhatia Babli Bouncer Movie Dubbing Work Finished

பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்ததாக  நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் நடிகை தமன்னா துவங்கினார். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக இயக்குனர் மதுர் பண்டர்க்கார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகை தமன்னா உடன் டப்பிங் பேசிய பிறகு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tamannaah Bhatia Babli Bouncer Movie Dubbing Work Finished

இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர்.

Tamannaah Bhatia Babli Bouncer Movie Dubbing Work Finished

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் தமன்னா பாட்டியா பவுன்சர் சாயலில் தோன்றியிருந்தார்.

Also Read | திருச்சிற்றம்பலம் படம் பார்த்துட்டு டிவிட்டரில் செல்வராகவன் இட்ட பதிவு! வைரலாகும் ட்வீட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah Bhatia Babli Bouncer Movie Dubbing Work Finished

People looking for online information on Babli Bouncer Movie, Babli Bouncer Movie Updates, Tamannaah, Tamannaah Bhatia will find this news story useful.