Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

திருச்சிற்றம்பலம் படம் பார்த்துட்டு டிவிட்டரில் செல்வராகவன் இட்ட பதிவு! வைரலாகும் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த பின் இயக்குனர் செல்வராகவன் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Dhanush Thiruchitrambalam Movie Review from Selvaraghavan

Also Read | "அடுத்த படமும் இவர் Direction'ல தான்.." சியான் விக்ரம் கொடுத்த தெறி அப்டேட்!!.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் நேற்று (ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல்) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

ரசிகர்கள் விசில் சத்தமும் ஆரவாரமான கைதட்டலுக்கு மத்தியில் திருச்சிற்றம்பலம் படம் கோலாகலமாக வெளியானது. தமிழகம் முழுவதும் பெருநகரங்களில் காலை 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சில பகுதிகளில் காலை 10:30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது.

Dhanush Thiruchitrambalam Movie Review from Selvaraghavan

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர்  செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில், "திருச்சிற்றம்பலம் பார்த்தேன்! என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு ஃபீல் குட் படத்தைப் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டது. பாரதிராஜா சார், பிரகாஷ் ராஜ் சார், நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஆகியோரின் குறிப்பிடத்தக்க நடிப்பு. அனிருத்தின் மென்மையான இசை படத்தை ஆள்கிறது! ஓம் பிரகாஷ் மூலம் பதிவுசெய்யப்பட்ட அழகான தருணங்கள். மித்ரன் ஜவகர், இந்த அழகான மற்றும் இதயத்தை சூடேற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்கு படத்தை உருவாக்கியதற்காக உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ஒவ்வொருவருக்கும் ஷோபனா போன்ற ஒரு தோழி வாழ்க்கையில் தேவை! "  என கூறி ட்வீட் செய்துள்ளார்.‌

Dhanush Thiruchitrambalam Movie Review from Selvaraghavan

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

Dhanush Thiruchitrambalam Movie Review from Selvaraghavan

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

Also Read | கோப்ரா படத்தின் டிரெய்லர் எப்போ வரும்? சியான் விக்ரம் கொடுத்த அதிரடி அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Review from Selvaraghavan

People looking for online information on Dhanush, Selvaraghavan, Thiruchitrambalam, Thiruchitrambalam Movie Review will find this news story useful.