Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"பிளாக் பஸ்டர்".. 'விருமனை' வாழ்த்திய 'அருண்மொழி வர்மன்' .. வைரலாகும் ஜெயம் ரவி ட்வீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் பிரபல கதையான பொன்னியின் செல்வன், தற்போது உலகளவில் பலராலும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான இந்திய படைப்பாக உருவாகி இருக்கிறது.

Jayam Ravi Wishes Karthi Viruman Suriya Muthaiya

முன்னதாக இப்படத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும், தமது ட்விட்டரில், படப்பிடிப்பின்போது இயக்குநர் மணிரத்னம் தன்னை பிரத்யேகமாக கவனித்துக் கொண்டதாக குறிப்பிட்டு, அடுத்து மணிரத்னத்துடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது வருமோ.. என்பது போல பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்திருந்த நடிகர் கார்த்தி, “இளவரசே அவ்வளவு எளிதாக நீங்கள் விடை பெற முடியாது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் எம் பணி முடிந்துவிடும். சோழதேசம்வந்ததும் சந்திப்போம்...வந்தியதேவன்” என்று கூறியிருந்தார். இதேபோல் பொன்னியின் செல்வன் இசை விழாவில் தனக்கு குதிரையேற்ற பயிற்சியினை, நடிகர் கார்த்தி அளித்திருந்ததாக ஜெயம் ரவி கூறியிருந்தார்.

இந்நிலையில் கார்த்திக்கும், கார்த்தியின் விருமன் திரைப்படத்துக்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட்டுக்கும், இயக்குநர் முத்தையாவுக்கும் நடிகர் ஜெயம் ரவி, வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். கார்த்தி ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள திரைப்படம் விருமன்.

Jayam Ravi Wishes Karthi Viruman Suriya Muthaiya

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்டு 12-ஆம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Wishes Karthi Viruman Suriya Muthaiya

People looking for online information on 2D Entertainment, Jayam Ravi, Karthi, Suriya, Viruman will find this news story useful.