Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"அடுத்த படமும் இவர் Direction'ல தான்.." சியான் விக்ரம் கொடுத்த தெறி அப்டேட்!!.. உற்சாகத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

படத்திற்கு படம், வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கெட்அப் மூலம் அசத்தக் கூடியவர் நடிகர் 'சியான்' விக்ரம்.

Chiyaan vikram movie with ajay gnanamuthu again confirmed

அந்த வகையில், நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தாக கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள், ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதில், கோப்ரா திரைப்படம், ஆகஸ்ட் 31 ஆம் தேதியும், இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதியும் திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

இதில், கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரமுடன், கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்தியூஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம். அத்துடன் புதிய வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விக்ரம், அதன் பின்னர் தனது திரைப்படம் தொடர்பான அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, கோப்ரா படக்குழுவினருடன் இன்று ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். இதில், பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது, கோப்ரா திரைப்படம் குறித்து, நிறைய சுவாரஸ்யமான தகவலை விக்ரம், அஜய் ஞானமுத்து உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனது அடுத்த படத்தின் இயக்குனர் குறித்தும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ள அப்டேட், ரசிகர்களை அதிகம் உற்சாகப்படுத்தியுள்ளது. கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு, பா. ரஞ்சித் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத 'Chiyaan61' திரைப்படத்தில் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில், மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதை ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக விக்ரம் அறிவித்துள்ளார். கோப்ரா படத்திற்கு பிறகு அடுத்த படம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப்ரா படம் வெளியாவதற்கு முன்பே, அஜய் ஞானமுத்து இயக்கத்தில், மீண்டும் தான் நடிக்க உள்ளதை பற்றி விக்ரம் தெரிவித்துள்ள விஷயம், ரசிகர்களை அதிகம் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan vikram movie with ajay gnanamuthu again confirmed

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, Ponniyin Selvan part 1, Vikram will find this news story useful.