Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

Ponniyin Selvan :இரண்டாவது சிங்கிளுக்கு முன் வெளியான அசத்தல் Glimpse வீடியோ!!.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

ponniyin selvan second single glimpse video released

Also Read | கோப்ரா படத்தின் டிரெய்லர் எப்போ வரும்? சியான் விக்ரம் கொடுத்த அதிரடி அப்டேட்!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான், விக்ரம் பிரபு, அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

ponniyin selvan second single glimpse video released

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் முதல் சிங்கிள் என அனைத்தும் வெளியாகி, மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், "பொன்னி நதி" என்ற முதல் சிங்கிள், ஏ.ஆர். ரஹ்மான் குரலில் வெளியாகி இருந்த நிலையில், இன்று வரை பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்ததுடன் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சிங்கிளான 'சோழா சோழா', இன்று மாலை (19.08.2022) 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ponniyin selvan second single glimpse video released

தமிழில் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ள இந்த பாடலை, சத்ய பிரகாஷ், VM மஹாலிங்கம் மற்றும் நகுல் அப்யங்கர் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், சோழா சோழா பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பாடலின் இசையுடன், ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரமின் லுக்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், இதன் கிளிம்ப்ஸ் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | "அடுத்த படமும் இவர் Direction'ல தான்.." சியான் விக்ரம் கொடுத்த தெறி அப்டேட்!!.. உற்சாகத்தில் ரசிகர்கள்

மேலும் செய்திகள்

ponniyin selvan second single glimpse video released

People looking for online information on பொன்னியின் செல்வன், Ponniyin Selvan part 1, Ponniyin selvan second single will find this news story useful.