Bigg Boss 3 : கேப்டனே Rules-அ மீறலாமா? - Bigg Boss கொடுத்த தண்டனை! - சோளமுத்தா போச்சா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 24ம் நாள் எபிசோடில் ரூல்ஸை மீறிய கேப்டனை தண்டிப்பதாக ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸையும் தண்டித்துவிட்டார் பிக் பாஸ்.

Bigg Boss Tamil 3 Highlights - Bigg Boss Punishes, Sakshi as a captain violates major rule in smoking area

பிக் பாஸ்  சீசன் 3-ன், 24ம் நாள் எபிசோடில், சாக்ஷி தனது கேங்குடன் ஸ்மோக்கிங் ஏரியாவில் அமர்ந்து புறம் பேசியதை கவனித்த பிக் பாஸ், ஹவுச்மேட்ஸ் அனைவரையும் லிவிங் ஏரியாவிற்கு அழைத்து தண்டனையை வழங்கினார்.

பிக் பாஸ் போட்டிருந்த ரூல் படி, ஸ்மோக்கிங் ஏரியாவில் ஒருவருக்கு மேல் இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனை பிக் பாஸ் பலமுறை அறிவுறுயிருந்த போதிலும், பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டனாக இருக்கக் கூடிய சாக்ஷி, தனது கூட்டாளிகளுடன் ஸ்மோக்கிங் ஏரியாவில் அமர்ந்து லொஸ்லியா எதற்கு எடுத்தாலும் மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்கிறார், ரொம்ப சென்சிட்டிவ், ஆட்டிட்யூட் காட்டுகிறார் என பேசிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, கேப்டனாக இருந்துக் கொண்டு ரூல்ஸை மீறியதால் பிக் பாஸ் தண்டனை வழங்கினார். இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் சேமித்து வைத்திருக்கும் புள்ளிகளில் இருந்து 100 புள்ளிகளை குறைப்பதாக பிக் பாஸ் அறிவித்தார்.

இதனால், தனது தவறுக்கு மாறாக என்ன செய்ய வேண்டும் என சாக்ஷி ஹவுஸ்மேட்ஸிடம் கேட்க, இனி இந்த தவறை செய்யாமல் இருப்பதே நல்லது என அறிவுரை வழங்கினர்.