''Love பன்றேன் மச்சான், கல்யாணம் பண்ண போறேன் மச்சான்'' - Bigg Boss 3 new promo
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 15, 2019 10:10 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் (14.07.2019) இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேறினார். அது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனுடன் உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுடன் அவர் அமர்ந்திருந்தார். அப்போது மற்ற போட்டியாளர்களிடம் வனிதா பற்றி கேட்டறிந்தார்.
அதற்கு ஒவ்வொருவரும் வனிதா பற்றி தங்களுக்கு தோன்றியதை தெரிவித்தனர். குறிப்பாக ஷெரின், சாக்ஷி உள்ளிட்டோர் வனிதா பற்றி பெருமையாக தெரிவித்தனர். இதனையடுத்து அவர் கண்கலங்கினார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீரா பற்றி ஷெரினும் சேரனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பேசும் சேரன், ''அவளுக்கு பிக்பாஸ் வீட்ட விட்டு வெளியேறுவோம்னு பயம் வந்துடுச்சு. அதனால தான் இப்படி பன்றா. லவ் பன்றேன் மச்சான். கல்யாணம் பண்ணிக்க போறேன் மச்சானா என்ன அர்த்தம்?'' என்று சேரன் கோவமாக தெரிவித்தார்.
#Day22 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/RuqXVFAXHc
— Vijay Television (@vijaytelevision) July 15, 2019