‘14 பேர் ஒருத்தர எதிர்த்தா.. அப்போ நான் அதுக்கும் மேல..’ - கெத்துக்காட்டிய மீரா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 01:13 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் மீரா. முதல் வாரத்திலேயே, தனித்து பார்க்கப்பட்ட மீரா, தனது செயல்களால் மெல்ல மெல்ல ஹவுஸ்மேட்ஸிடம் நெருக்கமாக தொடங்கினார்.

எனினும், பிக் பாஸ் வீட்டில் வெடித்த பல பிரச்சனைகளுக்கு மீரா தான் காரணம் என்ற பிம்பம் அவரை தொற்றிக் கொண்டது எனலாம். அதைத் தொடர்ந்து, சென்ற வாரம் கமல்ஹாசன் முன்னே முன்னுக்கு பின் முரணாக பேசிய மீரா, நிறைய பொய் சொல்கிறார் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகி வரும் மீரா, இந்த வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். ஹவுஸ்மேட்ஸிடம் அதிக வாக்குகளை பெற்று மீரா இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், சொல்வதெல்லாம் உண்மை டாஸ்க்கில் உண்மையை சொல்ல வந்த மீரா தேர்ந்தெடுத்த சீட்டில் இரண்டு கேள்விகள் இருந்தன. அதில் ‘என் தகுதிக்கு ஏற்ற போட்டியாளர்’ என்ற கேள்விக்கு பதிலளித்த மீரா, அது தர்ஷன் தான். இங்கு வந்ததில் இருந்து எனக்கான Tough போட்டியாளர் என்ற லிஸ்டில் அவர் தான் டாப்பில் இருக்கிறார் என்றார். அடுத்ததாக ‘உன்னை ஒரு போட்டியாளராக பார்க்கவில்லை’ என்ற கேள்விக்கு சேரன் என மீரா பதில் கூறினார். மற்றவர்கள் பார்த்த சேரனை விட எனக்கு வேறு மாதிரியாக தான் தெரிகிறார் என கூறினார்.
'இங்கிருக்கும் நிறைய பேர் என் பேர சொன்னீங்க, அதனால இத சொல்றேன், “பழிப்போடும் உயிர்கள் இங்கே.. பலியாகும் உயிர்கள் எங்கே..?” என்பதை சுட்டிக்காட்டி பேசிய மீரா, இங்க நிறைய பேர் என் பேர சொன்னதால நான் உங்களுக்கெல்லாம் கடுமையான போட்டியாளரா இருக்கேன்னு உணர்கிறேன். 14 பேர் ஒருத்தருக்கு எதிரா நிற்கிறத நான் எப்படி பாக்குறேன்னா, உங்க எல்லாருக்கும் புரியாத அளவுல இருக்கேன்னா உங்க எல்லாரவிட ஒரு ஸ்டெப் மேல இருக்கேன்ன்னு நான் நினைக்கிறேன்’ என கெத்தாக பேசினார்.