'Friend தான் ஆனா.. I love you' - அபிராமியின் பளீச் Proposal
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 12:01 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான முதல் டாஸ்க்கில் அபிராமி தனது காதலை தெரிவித்து தனது நண்பரை வெட்கத்தில் ஆழ்த்தினார்.

ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் வெளியேறியதையடுத்து, இந்த வாரம் 14 போட்டியாளர்கள் புதிய டாஸ்குகளை விளையாட தொடங்கினர். முதல் டாஸ்க்காக ‘சொல்வதெல்லாம் உண்மை’ டாஸ்க்கில் ஒரு பவுலில் பேப்பரில் எழுதப்பட்டிருக்கும் கேள்விக்கு ஹவுஸ்மேட்ஸ் உண்மையான பதில்களை கூற வேண்டும்.
அந்த டாஸ்க்கில் அபிராமி எடுத்த சீட்டில், ‘நீ நண்பனானது என் பாக்கியம்’ என்ற கேள்விக்கு மனதில் தோன்றியதை வெளிப்படையாக அபிராமி கூறினார். அவர் பேசுகையில், ‘ஒரு பையன் இவ்ளோ குளோஸ் ஃப்ரெண்டா, நம்பிக்கையானவனா கிடைப்பாங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல. இது ஃப்ரெண்ட்ஷிப்பா இல்ல அதுக்கும் மேலயா என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. நீ எனக்கு ஃப்ரெண்டா கிடைச்சத்துக்கு நான் ரொம்பவும் சந்தோஷப்படுறேன். என்னோட சுக, துக்கம் எல்லாத்தையும் பகிர்ந்துக்க தோள் கொடுத்திருக்க அதுனால ஐ லவ் யூ’ என கூறினார்.
அதைத் தொடர்ந்து ‘உன்னை பார்த்ததே என் வாழ்வின் சாபம்’ என்ற கேள்விக்கும் அதேபோல் பளிச்சென்று பதில் கூறினார். ‘நேர்மையா சொல்லனும்னா அது மீரா தான். எந்த விஷயம் செய்தாலும் உண்மையா இல்ல, எல்லாத்துக்கும் குற்றம் சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இப்படி சொறிஞ்சிக்கிட்டே இருகக்றதால அவங்கள பாத்ததே என் வாழ்க்கைல ஒரு சாபம்னு கருதுறேன்’ என்றார்.