Bigg Boss 3: எல்லாரும் பின்னாடி தான் பேசுறாங்க..! ஆனா மோகனின் டாய்லெட் பஞ்சாயத்தில் கேப்டனே இப்படியா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 17, 2019 01:20 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 23ம் நாள் எபிசோடில் டாய்லெட் டீமில் இருந்து கிச்சன் டீமிற்கு மாற்ற மோகன் வைத்தியா கேப்டனிடம் வைத்த கோரிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இந்த வாரம் மோகன் வைத்தியாவிற்கு டாய்லெட் க்ளீனிங் டீம் ஒதுக்கப்பட்டிருந்தது, தனக்கு அந்த தண்ணீர் ஒத்துக்கவில்லை எனக் கூறி தன்னை சமையல் டீமிற்கு மாற்றுமாறு கேப்டன் சாக்ஷியிடம் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே மோகன் வைத்தியாவிற்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் இருப்பதால் அவரை மீண்டும் சரவணன் இருக்கும் சமையல் டீமில் சேர்ப்பதற்கு கேப்டன் சாக்ஷி ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரேஷ்மா அவருக்கு சமையல் டீமில் பாத்திரம் கழுவும் வேலை சுத்தமாக ஒத்துவராது என பேசினார். அதனை கேப்டனாக இருக்கும் சாக்ஷி மோகன் வைத்தியாவிடம் ரகசியமாக பாத்ரூம் அருகே பேசினார். அவர் பேசுகையில், நீங்க டீம் மாறினால் கேப்டனாக இருக்கும் எனக்கு தான் பிரச்சனை என அவர்கள் கருதுவதாக கூறினார்.
மேலும், இங்கு யாருக்குமே நேரடியாக பேசும் தைரியம் இல்லை. எல்லோரும் பின்னாடி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என சாக்ஷி வெளிப்படையாக பேசியதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் பின்னாடி பேசுவதை ஒரு ரூலாக வைத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.