'அழுத காதலி அண்ணான்னு சொன்னா.. Take it easy மச்சான்..!' - பிக் பாஸ் வீட்டில் புது ட்விஸ்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 12:34 AM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல்வேறு காதல் கதைகள் அரங்கேறி வந்தாலும், அதில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இளம் பெண்களிடம் மாமா பொண்ணுங்களாக பாவித்து கிண்டல், கேலி என Flirt செய்து வரும் கவின் உண்மையில் யார் மீது தான் காதல் வயப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அபிராமி, சாக்ஷி என கவினின் காதல் கலாட்டாக்கள் இருந்தாலும், லொஸ்லியாவிடம் தொடக்கம் முதலே கவின் மிகவும் கவனமாகவே பழகி வந்தார். இருவருக்கும் இடையில் ஏதோ இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் வேளையில், இருவரும் சின்ன சின்ன சண்டைப்போடுவதும், பின் சமாதானம் ஆவதும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
இந்நிலையில், 21ம் நாள் எபிசோடில், கிட்சனில் பிசியாக இருந்த கவினை அண்ணா என அழைக்குமாறு ஹவுஸ்மேட்ஸ் வற்புறுத்த லொஸ்லியா கவினை அண்ணா என சொல்லி கவினின் ஹார்ட்டை வெடிக்க வைத்தார்.
இதனால், கவலையில் இருந்த கவினை பின்னர் லொஸ்லியா சமாதானம் செய்தார். அவர்கள் பேசுகையில் கவின், ‘நீ எதை சொல்ல மாட்டேன் என சொன்னியோ அத சொல்லிட்ட.. அவங்க கேட்டா எதுனாலும் சொல்லிடுவியா? நீ அண்ணான்னு சொன்னா எனக்கு எந்த அளவுக்கு ஹர்ட் ஆகுதுன்னு சொல்லியும் நீ திரும்பவும் சொல்லியிருக்க.. உன்னால எப்படி இப்படி சொல்ல முடியுது?’ என்றார். அதற்கு லொஸ்லியா 'எல்லோரும் கேட்டாங்க அதுனால சொன்னேன். அப்பவும் ஃப்ரெண்டுன்னு தான் சொன்னேன்' என்றார்.
அதேபோல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ டாஸ்க்கிலும் யாருடன் பேச பிடிக்கும் என்ற கேள்விக்கு லொஸ்லியா வெட்கப்பட்டு முகத்தை மறைத்துக் கொண்டு கவின் தான் என கூறினார். கவினை பிடிக்கும் அதனால் அவருடன் கதைக்க பிடிக்கும் என தனது ஸ்டைலில் பேசி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.