‘எனக்கு Girl Friend இருக்கு..! அம்மாக்கிட்ட கல்யாணம் பேசுறியா..?’ - தர்ஷன் மீரா லவ்லி Chat
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 15, 2019 12:12 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எலிமினேஷனை விட மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது தர்ஷன் - மீரா இடையிலான காதல் பயணம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முதலே போட்டியாளர்கள் சக ஹவுஸ்மேட்ஸ் மீது காதல் வயப்படும் சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. முதல் சீசனில் ஓவியா-ஆரவ், அடுத்த சீசனில் மகத்-யாஷிகா போன்ற ஜோடிகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், 100 முடிந்து அவரவர் அவரவர் வழியில் பயணித்தனர்.
கடந்த 2 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை எனலாம். கவின், அபிராமி, லொஸ்லியா, சாக்ஷி என பலரிடம் Flirt செய்து சிறை சென்றார். இருந்தபோதிலும் அவரது லவ் டிராக் ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இதனிடையே, தர்ஷன் மீது மீராவுக்கு ஏற்பட்ட காதல் ஆசை பிக் பாஸ் ஷோவில் எலிமினேஷனை காட்டிலும் ஹைலைட்டான டாப்பிக்காக மாறியது. மீரா-தர்ஷன் இடையே நடந்த பேச்சுவார்த்தை பற்றி இருவருமே தங்களது தரப்பை நியாயப்படுத்தி பேசி பார்வையாளர்களை மூச்சிறைக்க வைத்தனர்.
தொடக்கத்தி தனிமைப்படுத்தப்பட்ட மீரவிடம் நட்பு பாராட்டியதால் அவர் மீது காதல் மலர்ந்ததாக மீரா கூற, அவர் இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் மாற்றி மாற்றி பேசுகிறார் என தர்ஷன் குறை கூறினார். மேலும், வெளியில் தனக்கு ஒரு பெண்ணுடன் காதல் இருப்பதாக கூறி மீராவின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகும், அது வெறும் Crush தானே விட்டுவிடு என மீரா கூறியதால் கடுப்பான தர்ஷன், எனக்கு காதலி இருப்பதை நான் ஏன் இவரிடம் கூற வேண்டும் அதற்கு என்ன கட்டாயம் இருக்கிறது என வாதிட்டார்.
தர்ஷன் காதலை மறுத்த போதிலும், அம்மாவிடம் வந்து பேசு, அம்மா வைக்கும் Interview-வில் பாஸ் ஆகு என்றெல்லாம் மீரா பேசியது தனக்கு பிடிக்கவில்லை என தர்ஷன் தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தான் இருவரும் அறிமுகமானார்கள். வந்த 2 வாரத்திற்குள் Friend, காதல், கல்யாணம் என சம்மந்தம் பேசும் அளவிற்கு இந்த பயணம் சென்றது பார்ப்பவர்களையும், என்னையும் வியக்க வைப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.