Bigg Boss 3: ‘கவின் Something Special அப்படி தானே..? மச்சான் there is..' - முடிவுக்கு வரும் சாக்ஷி-கவின் லவ் டிராக்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 17, 2019 11:49 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 4 பெண்களை ரூட்டுவிட்டு கேலியும், கிண்டலுமாக சுற்றிக் கொண்டிருந்த கவினுக்கு செக் வைக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் பல காதல் டிராக்குகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவின் 4 பெண்களிடம் Flirt செய்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அதில் தற்போது சாக்ஷி மற்றும் லொஸ்லியாவிடம் கவின் பழகி வருவது நட்பா, காதலா என பல சந்தேகங்கள் பார்வையாளர்களை குழப்பமடையச் செய்தது.
இந்நிலையில், 24ம் நாள் எபிசோடில் நடத்தப்பட்ட நீயா நானா விவாத நிகழ்ச்சியில் சாக்ஷி-கவின்-லொஸ்லியா இடையிலான முக்கோண நட்பா? காதலா என்ற குழப்பம் சற்று தெளிவானது என்றே கூறலாம். சாக்லெட் கொடுத்த விவகாரத்தில் மூவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருந்த நிலையில், நீயா நானா டாஸ்க்கை முடித்த பிறகு கவின் சாக்ஷி மற்றும் லொஸ்லியா ஆகியோரிடம் உட்கார்ந்து பேசி தெளிப்படுத்த முயற்சித்தார்.
அப்போது பேசுகையில், ஆரம்பத்தில் சாக்ஷி தன்னிடம் நெருக்கமாக நட்பு பாராட்டியதால் அவருடன் பழகினேன், பின்னர் லொஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வருகிறேன் என கவின் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சாக்ஷி, ‘நீ என்கிட்ட ஒரு ஃப்ரெண்டாதா இருக்கியா? கைப்பிடிக்கிறது, பக்கத்துல உட்காரது எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப்பா? என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த கவின், ‘உறவுக்கார பெண்களிடம் பழகுவது போல் தான் எல்லோர்கிட்டயும் பேசிட்டு இருக்கேன். யார் மேலயும் எந்த ஃபீலிங்க்ஸும் இல்ல. அப்படி ஒரு ஃபீலிங் உருவான பொதே உன்கிட்ட தெளிவா பேசிட்டேன். எதுவா இருந்தாலும் வெளிய போய் பார்த்துக்கலாம்னு. நீ அதை புரிஞ்சிக்காம பொசசிவ் ஆகி என்ன அட்டாக் பண்ணது நீ’ என்றதும், சாக்ஷி இருக்கட்டும் அப்போ சம்திங் ஸ்பெஷல் இருக்கு தானே என்றார். உடனே கவின் தேர் இஸ் நத்திங் மச்சான் என்று முடித்தார். ஆக இனிமேல் நான் உன்ன எப்பவும், உள்ளவும், வெளியவும் தொல்லை பண்ண மாட்டேன் என சாக்ஷி தெரிவித்தார்.
இதனால், கவின், சாக்ஷி இடையிலான உறவு வெறும் நட்பு தானா அல்ல அதையும் தாண்டி புனிதமானதா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.