பிக் பாஸ் வீட்டில் இருந்து 2வது ஆல் அவுட் - வெளியேறினார் வனிதா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 14, 2019 10:42 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 2வது போட்டியாளராக வனிதா வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 3-ல் முதல் இரண்டு சீசன்களை போல் சின்ன சின்ன சண்டை, காதல், மோதல், பாசம் என எல்லா எலிமெண்ட்டும் இருந்தாலும், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. போட்டியாளர்களில் சிலர் Fake-க்காக இருப்பதகாவும் கூறி வந்தனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வனிதா வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் தொடக்கம் முதலே எல்லா பிரச்சனைகளிலும் மூக்கை நுழைத்து, பிக் பாஸ் வீட்டில் சண்டைகளை பேசி பேசியே பெரிதாக்கியதாக கருதப்படும் வனிதா, மக்களின் வாக்குகளில் பின் தங்கியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றாப்பட்டார்.
வனிதாவின் எலிமினேஷனால் நால்வர் கூட்டணியே சோகத்தில் மூழ்கியது. முதல் நாள் முதலே ரேஷ்மாவும், வனிதாவும் நெருக்கமான தோழிகளாக பழகியதால், வனிதாவின் பிரிவால் ரேஷ்மா கவலையில் இருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில் எதுவாக இருந்தாலும் தைரியமாக பேசும் ஒரே ஆள் வனிதா தான் என பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருசிலர் பேசுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், வனிதா வெளியேறியதற்கான காரணங்களை தங்களது கருத்தாக முன்வைத்தனர். ஒருவேளை இதில் எதாவது ட்விஸ்ட் கேம் இருக்கும் எனவும் சிலர் யூகித்தனர். ஆனால், அந்த யூகமும் தோற்றுப்போனது.